ஃபாஸ்ட் புட் வாழ்க்கையில் தங்களது குழந்தை பருவத்தின் கொண்டாங்களை தொலைத்துவிட்டு தான் தற்போதைய காலக்கட்ட குழந்தைகள் வளர்கிறார்கள். அதிலும் அடிக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம், நான்கு சுவர் தான் அவர்களுக்கு உலகமாகிவிடும். அவர்களது பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு எது வேண்டும் என்பதை சரியாக உணராமல், அவர்களுக்காக பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்க கடைசியில், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே பெரிய விரிசலே விழுந்துவிடும்.
இப்படிபட்ட சூழலை உணராமல், இந்த அவசர உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களை நிற்க வைத்து, குழந்தைகளின் மனபோராட்டங்களை புரிய வைக்க வருகிறது ‘வானரப்படை’ திரைப்படம்.
தமிழ் சினிமாவை பொருத்தவரை குழந்தைகளுக்கான படம் என்பது அறிதான ஒன்று என்றாலும் அப்படி அறிதாக வெளியாகும் அனைத்துப் படங்களும் அனைவரையும் ஈர்க்கும் விதமாகவே இருந்திருக்கின்றன. அந்த வகையில், குழந்தைகளை மட்டும் இன்றி, குழந்தைகளை சரியாக புரிந்துக்கொள்வது குறித்து பெற்றோர்களுக்கும் நல்ல மெசஜை இந்த ‘வானரப்படை’ சொல்கிறது.
ஸ்ரீருக்மணி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், எம்.ஜெயபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், கவிஞர் கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் நாயகனாக அறிமுகமாகிறார். பஞ்சு சுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்க, அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் ஆகிய 6 சிறுவர்களும் வானரப்படையாக நடிக்கிறார்கள்.
இப்படத்தில் நாயகியாக அவந்திகா அறிமுகமாகிறார். பல முன்னனி நடிகைகள் நடித்த பல விளம்பரப் படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் அவந்திகா, ஜோதிகா நடித்த பல விளம்பரப் படங்களில் அவருடன் நடித்திருக்கிறார்.
இயக்குநர் கே.ஆர் இயக்கிய பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த லோகி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சுரேஸ் அர்ஸ் எடிட்டிங் செய்கிறார். ஏ.சண்முகம் கலையை நிர்மாணிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் எம்.ஜெயபிரகாஷ் படம் குறித்து கூறுகையில், “பெற்றோருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளி தான் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களை மையமாகக் கொண்டு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் மனபோராட்டங்களை சொல்லும் திரைப்படமாக ‘வானரப்படை’ உருவாகியுள்ளது.” என்றார்.
கே.ஆர் இயக்கிய பல வெற்றிப் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியிருக்கும் எம்.ஜெயபிரகாஷ், ‘நேர் எதிர்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியிருக்கிறார். ‘வானரப்படை’ அவரது இரண்டாவது படமாகும். தற்போது படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னனி பணியில் ஈடுபட்டு இருக்கும் இயக்குநர் எம்.ஜெயபிரகாஷ், விரைவில் ‘வானரப்படை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை வித்தியாசமான முறையில் நடத்த இருக்கிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...