பைரசி என்பது தமிழ் திரைத்துறைக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. படம் வெளியான அன்றையே தினமே, சட்டவிரோதமாக இணையதளங்களில் படம் வெளியாவதால், தயாரிப்பாளர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், பைரசி என்பது பூதாகரமாக வளர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.
இதற்கிடையே, இப்படி இணையத்தில் வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்குகளில் இருந்து திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டு தான் வெளியாகிறது, என்பது ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, இப்படி பைரசிக்கு துணை போகும் திரையரங்குகள் எவை என்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது 10 திரையரங்குகள் பைரசி துணை போவதாக ஆதாரப்பூர்வமாக கண்டறிந்துள்ள தயாரிப்பாளர்கள் சங்கம், அந்த திரையரங்கங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது, அந்த 10 திரையரங்கங்களுக்கும் இனி எந்தவித ஒத்துழைப்பும் தரப்போவதில்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள தயாரிப்பாளர்கள் சங்கம், வரும் அக்டோபர் 17, 18 தேதிகளில் வெளியாக உள்ள புதிய திரைப்படங்களை அந்த திரையரங்குகளில் வெளியிட தடையும் விதித்துள்ளது. இந்த படங்களுக்கு மட்டும் இன்றி, இனி அந்த திரையரங்கங்களில் எந்த திரைப்படங்களும் வெளியிடக்கூடாது, என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அந்த 10 திரையரங்கங்களில் பட்டியலும், அங்கு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலும் இதோ,
1. கிருஷ்ணகிரி முருகன் - மனுசனா நீ
2. கிருஷ்ணகிரி நயன்தாரா - கோலிசோடா டூ
3. மயிலாடுதுறை கோமதி - ஒரு குப்பைக் கதை
4. கரூர் எல்லோரா - ஒரு குப்பைக் கதை
5. ஆரணி சேத்பட் பத்மாவதி - மிஸ்டர் சந்திரமௌலி
6. கரூர் கவிதாலயா - தொட்ரா
7. கரூர் கவிதாலயா - ராஜா ரங்குஸ்கி
8. பெங்களூரு சத்யம் - இமைக்கா நொடிகள்
9. விருத்தாசலம் ஜெய் சாய் கிருஷ்ணா தியேட்டர் - சீமராஜா
10. மங்களூர் சினிபொலிஸ் - சீமராஜா.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...