பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியதோடு மேலும் பல பிரபலங்கள் மீதும் பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
வைரமுத்துவால் தான் பாதிக்கப்பட்டேன், அது உண்மை தன்னைப் போல மேலும் பல பாடகிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறும் சின்மயி, சமூக வலைதளங்களில், யார் யாரோ, பதிவிடும் பதிவுகளை, அது உண்மையா? அந்த நபர் யார்? என்ற எதையுமே ஆராயாலம், ரீட்வீட் செய்வதோடு, அந்த பதிவுகளை தனது சமூக வலைதளப் பக்கத்திலும் வெளியிடுகிறார்.
சின்மயின் இத்தகைய செயலால், எந்த தவறும் செய்யாத நடன இயக்குநர் கல்யாண் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். இலங்கை பெண் ஒருவர் கல்யாண் மீது பாலியல் புகார் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை சின்மயி ரீட்வீட் செய்ததால், இது வைரலாக பரவியது. இதனால், கல்யாண் மாஸ்டரின் குடும்பத்திலும் பிரச்சினைகள் ஏற்பட, திடீரென்று கல்யாண் மாஸ்டர் மீதான் பதிவு பொய்யானது என்ற தகவல் தெரிய வந்துள்ளதால், இந்த விவகாரத்தில் சின்மயி பின்வாங்கினார்.
இதற்கிடையே, நடன இயக்குநர் கல்யாண் மீது புகார் தெரிவித்த நபர், ”சின்மயியின் ட்வீட்டுகளால் என்ன நடக்கிறது என்பதை பார்க்க, காரணமே இல்லாமல் கல்யாண் மாஸ்டர் மீது புகார் தெரிவித்தது நான் தான். உங்களின் பெயரை பயன்படுத்தியதற்காக சாரி” என்று ட்வீட் செய்திருக்கிறார். இதை கல்யாணும் ரீட்வீர் செய்திருக்கிறார்.
மேலும், தனக்கு வரும் பதிவுகளை எந்த கேள்வியும் கேட்காமல், அப்படியே அதை சின்மயி போஸ்ட் செய்கிறார். அதனால் அவரின் ஆதாரமற்ற பதிவுகளை நம்ப வேண்டாம். ஆண்களை அசிங்கப்படுத்த பெணியவாதிகள், இந்த மீ டூ டிரெண்டை பயன்படுத்துகிறார்கள். என்று கல்யாண் மீது புகார் தெரிவித்தவர் தெரிவித்திருக்கிறார்.
”விளையாட்டுக்கு புகார் தெரிவிப்பதற்கு நான் தான் கிடைத்தேனா” என்று அந்த நபரிடம் கேள்வி எழுப்பிய கல்யாண், இது தொடர்பான பதிவுகளை தயவு செய்து மீடியாக்களுக்கு அனுப்புமாறும் கேட்டுள்ளார்.
இந்த விஷயத்தில், கல்யாண் மீது பரவும் புகார் பொய்யானது, என்பதை ஒப்புக்கொண்ட சின்மயி, “இப்படி ஒருவர் மீது பொய்யான தகவல் பரவுவதை ஏற்க முடியாது” என்று டிவீட்டியதை பார்த்த அந்த நபர், ”நீங்கள் தான் அவர் பற்றி வந்த ட்வீட்டை சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்தது. உங்களின் புகார்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது. நீங்கள் தான் அதற்கு பொறுப்பு. என் கடமை என்பதால் உண்மையை சொன்னேன். அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது.” என்று பதிவிட்டுள்ளார்.
இப்படி, எதையும் ஆராயாமல் சின்மயி ஷேர் செய்யும் இதுபோன்ற தவறான பதிவுகளால் நடன இயக்குநர் கல்யாண் பாதிக்கப்பட்டது போல, எத்தனை பேர் பாதிக்கப்பட போகிறார்களோ!
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...