எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி மற்றும் தினகரன் அணி என்று அதிமுக மூன்று அணிகளாக பிரிந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றாக இணைந்ததன் மூலம் தற்போது அதிமுக தினகரன் - ஓபிஸ், இபிஎஸ் அணி என்று இரண்டு அணிகளாக உள்ளது.
ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளவர்கள் கட்சியின் பொறுப்பில் இருந்தால், அப்பொறுப்பில் இருந்து அவர்களை உடனடியாக நீக்கும் தினகரன், அப்பொறுப்புகளில் தனது ஆதரவாளர்களை உட்கார வைக்கிறார்.
அந்த வகையில், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்த, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக காமெடி நடிகர் செந்திலை அப்பதவியில் நியமன் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கோகுல இந்திராவுடன், மகளிர் அணி இணைச்செயாளர் கீர்த்திகா, அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன், இளைஞர் பாசறை துணைத் தலைவர் கே.சி விஜய், இலக்கிய அணி இணைச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோரும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றத்தின் இணைச் செயலாளராக கோனேஸ்வரன், புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்களாக மணிகண்டராஜா, ஜெயராஜ், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்களாக ராமலிங்கம் ஜோதி, சங்கர், முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் அணி இணைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெயராஜ் மற்றும் இளைஞர் பாசறை செயலாளராக கே.சி.விஜய் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...