பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது தெரிவித்து வரும் பாலியல் புகார் விவகாரம் தொடர்பாக சினிமா பிரபலங்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். வைரமுத்து மீது உலருக்கு உள்ள காற்புணர்ச்சியின் வெளிப்பாடே இந்த பாலியல் புகார், என்றும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், சின்மயின் பாலியல் புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, அவரது இத்தகைய செயலால், குடும்ப பெண்களுக்கும் கெட்டப் பெயர் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
விஜயின் ‘புலி’, ஜீவாவின் ‘போக்கிரி ராஜா’, பிரபு நடித்த ‘பந்தா பரமசிவம்’ ஆகிய படங்களை தயாரித்திருக்கும் பி.டி.செல்வகுமார் ’ஒன்பதுல குரு’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
சின்மயி விவகாரம் தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய பி.டி.செல்வகுமார், “வைரமுத்துவுக்கும் எனக்கும் எந்த பழக்கமும் இல்லை, அவரது செல்போன் எண் கூட என்னிடம் இல்லை. இந்த விஷயத்தை நான் பொதுவான முறையில், திரைப்படத்துறையை சேர்ந்தவன் என்ற முறையில் தான் பேசுகிறேன்.
எப்போதோ, சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறும் ஒரு சம்பவத்தை சின்மயி இப்படி கூறுவது சரியானதல்ல. வைரமுத்து தமிழ் சினிமாவில் முக்கியமானவர் மட்டும் அல்ல, 6 முறை தேசிய விருது பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர். பல உயரிய பாடல்களை கொடுத்தவர். அவர் இந்த நிலையை அடைய எவ்வளவு உழைத்திருப்பார், எத்தனை இரவுகள் தூங்காமல் இருந்திருப்பார். அப்படி ஒரு மரியாதை மிக்கவர் மீது சின்மயி இப்படி ஒரு புகார் கூறுவது மிகவும் தவறு.
சம்பவம் உண்மையாகவே நடந்ததாக இருக்கட்டும். அதை அப்போதே கூறியிருக்கலாமே, அல்லது இந்தியா வந்த பிறகாவது அதை பதிவு செய்திருக்கலாம். அப்போது விட்டுவிட்டு, இப்போது ஏன் புகார் கூற வேண்டும். வைரமுத்து ஒரு தமிழர் என்பதால் தான் அவர் மீது இப்படி பழி சுமத்தப்படுவதாக நான் எண்ணுகிறேன். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்பில்லை, தொழில்கள் முடங்கியுள்ளன, இவைகள் மீதுள்ள மக்களின் பார்வையை திசை திருப்பவே, இந்த விஷயத்தை தற்போது ஊதி பெரிதாக்குகிறார்களோ, என்று எண்ண தோன்றுகிறது.
சின்மயின் புகாரை ஏற்றுக் கொண்டால் அவரைப் போல பலர் பொய்யான புகார் கூறுவார்கள். பிறகு யார் மீது வேண்டுமானால், யார் மீதும் புகார் கூறலாம் என்றாகிவிட்டது என்றால் சமூகத்திற்கு நன்றாக இருக்காது.
சினிமாவில் பாலியல் துன்புறத்தல் இருக்கிறதா? உங்களிடம் தவறாக நடந்துக் கொள்கிறார்களா? முடியாது என்று விலகி விடுங்கள், அப்படி இல்லையா போலீசில் புகார் தெரிவியுங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள், அதைவிட்டுவிட்டு இப்படி தினம் தினம் ஒரு தகவலை கூறுவது, உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்வதற்கு சமமாமும். சின்மயி போன்றவர்களின் செயலால், சினிமாவில் உள்ள பல குடும்ப பெண்களுக்கும் கெட்டப் பெயர் ஏற்படுகிறது.” என்று தெரிவித்தார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...