பாலிவுட் சினிமாவில் தொடங்கிய மீ டூ விவகாரம், சின்மயினால் தமிழ் சினிமாவில் கொழுந்துவிட்டு எரிகிறது. வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய சின்மயி அவரை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட பல பெரும்புள்ளிகள் மீது பாலியல் புகார்களை கூறி வருகிறார்.
சின்மயின் இந்த செய்கையால், தற்போது பேட்டி கொடுக்கும் நடிகைகளிடம் மீ டூ பற்றி கேள்வி கேட்காத ஊடகங்களே இல்லை. அந்த அளவுக்கு மீ டூ விவகாரம் தான் தற்போது தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தமிழகத்திலும் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
இந்த நிலையில், நடிகை கஸ்தூரி பற்றி புது சர்ச்சை பூதம் ஒன்று கிளம்பி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த சர்ச்சையை எப்போதும் போல கூலாக எதிர்கொண்டிருக்கும் கஸ்தூரிக்கு, அவரைப் பற்றி வதந்தி பரப்பியவருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதாவது, சின்மயி உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் கூறும் பாலியல் புகார்களுக்கு சமூக வலைதளங்களில் பலர் ஆதரவு தெரிவிப்பது போல, பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். அப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், பாலியல் புகார் தெரிவிப்பர்களை கொச்சைப் படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் சில பதிவுகளை வெளியிடுகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர், ”நடிகை கஸ்தூரி என்னை படுக்கைக்கு அழைத்து ரூ.1 லட்சம் தருகிறேன் என்றார். 1 மணி நேரம் என்னால் முடியாது என்று சொன்னேன்” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த தவறான பதிவு தீயைப்போல வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ரசிகரின் இந்த தவறான பதிவுக்கு கூலாக பதில் கூறியிருக்கும் கஸ்தூரி, “அட, பொய் சொல்லும் போது கூட உண்மையை உளறிட்டான் பாருங்க. அவனால முடியாதுதான்- முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும் ! #கே_கூ
ரஜினி பேரை கெடுக்க இந்த மாதிரி எத்தினி பேரு அலையறானுவளோ” என டிவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அட, பொய் சொல்லும்போதுகூட உண்மையை உளறிட்டான் பாருங்க. 😅அவனால முடியாதுதான்- முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும் ! #கே_கூ
&mdash ; Kasturi Shankar (@KasthuriShankar) October 16, 2018
ரஜினி பேரை கெடுக்க இந்த மாதிரி எத்தினி பெரு அலையறானுவளோ ! 💦 pic.twitter.com/eEewaIxmu7
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...