விஜயின் ‘சர்கார்’ படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது. அதனால் விஜய் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் இருப்பதோடு, டீசரை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், டீசர் வெளியீட்டை மிகப்பெரிய அளவில் கொண்டாடவும் பல திட்டங்கள் போட்டிருக்கிறார்கள்.
மேலும், திரையரங்கங்களில் ‘சர்கார்’ டீசன் இன்று திரையிடப்படுவதால், அதற்காகவே விஜய் ரசிகர்கள் இன்று திரையரங்கங்களில் கூடி வருகிறார்கள்.
இந்த நிலையில், கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று, பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி ஸ்கீரின் வைத்து ‘சர்கார்’ டீசரை வெளியிடப்போகிறார்களாம்.
கேரள மாநிலம் கோழிகோடு பீச்சில் வைக்கப்பட்டுள்ள பெரிய திரையில் ‘சர்கார்’ படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு லைவ் ஸ்டிரீம் செய்யப்போகிறார்கள்.
கேரள ரசிகர்களின் இந்த ஏற்பாடு உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருப்பதோடு, கேரள விஜய் ரசிகர்கள் மீதான மரியாதையையும் உயர்த்தியிருக்கிறது.
1st Time In Kozhikode District( Kerala )
&mdash ; #SarkarKerala (@SarkarKeralaOfl) October 18, 2018
Live Teaser Streaming Will Happen At Calicut Beach !!
Conducted By AnbuRasikar Calicut !!#SARKARTeaserLive Streaming In Kerala ! Tmrw 6PM !!#ThalapathyFORT @SarkarKeralaOfl #SarkarKerala pic.twitter.com/ZfXaNlytBl
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...