வில்லன் கதாபாத்திரத்தில் மட்டும் இன்றி தான் எந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும், தனது எதார்த்தமான நடிப்பால் மிரட்டும் டேனியல் பாலாஜி, சமீபத்தில் வெளியான ‘வட சென்னை’ படத்தில் ‘தம்பி’ என்ற கதாபாத்திரத்தில் தனது இயல்பான நடிப்பால் கவர்ந்திருக்கிறார்.
ஏற்கனவே, ‘வேட்டையாடு விளையாடு’, ‘பொல்லாதவன்’ ஆகிய படங்கள் மூலம் நிரூபித்த டேனியல் பாலாஜி, நடிக்கும் படன்கள் அனைத்தும் வெற்றிப் படமாக இருந்தாலும், அவரது நடிப்பில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை என்னவோ குறைவு தான்.
இதற்கு காரணம், டேனியல் பாலாஜியின் மாறாத, அவர் மாற்றிக் கொள்ள விரும்பாத குணத்தால் தான். ஆம், டேனியல் பாலாஜி ஒரே சமயத்தில் மூன்று, நான்கு படங்களில் கமெடி ஆகுகும் பழக்கம் இல்லாதவர். ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டால், அந்த படம் முடியும் வரை வேறு எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆக மாட்டாராம். தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் தனது போர்ஷன் முடிந்த பிறகே அடுத்த படத்தில் நடிக்க ஓகே சொல்லுவாராம். இதனால் தான் பல படங்களின் வாய்ப்பு அவர் கைவிட்டு போயுள்ளது.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய டேனியல் பாலாஜி, “நான் எப்போதுமே எந்த கேரக்டரையும் விட்டுடக்கூடாதுனு நினைச்சு அந்தப் படத்துல கமிட்டாக மாட்டேன். இந்தக் கேரக்டருக்கு நாம செட்டாவோமானு எனக்குள்ள நானே கேட்டுப்பேன். ஓகேனு தோணுச்சுன்னா அதில் நடிப்பேன். ’வடசென்னை’ படமும் அப்படித்தான். அதே மாதிரி ஒரே நேரத்துல நாலு படத்தை கமிட் பண்ணி வெச்சுக்கிட்டு ஒரு படத்துக்கு 5 நாள், இன்னொரு படத்துக்கு 10 நாள்னு ஒதுக்கி நடிக்க மாட்டேன். ஒரு படத்தில் கமிட்டானால், அந்தப் படம் முடிஞ்சதுக்கு அப்பறம் தான் அடுத்தப் படத்தில் நடிக்க கமிட்டாவேன். அது ஒரு மாதத்தில் முடியிற படமாக இருந்தாலும் சரி, ஒரு வருஷத்தில் முடியிற படமாக இருந்தாலும் சரி. இதுனால எனக்கு வேற சில நல்ல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பும் என்னை விட்டு போச்சு. இருந்தாலும் இதை நான் தொடர்ந்து கடைப்பிடிச்சிட்டு இருக்கேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...