வாய்ப்பு இல்லாதவர்களுக்கும், வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் மந்திரக்கோலாக மாறியிருக்கிறது பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சி. இந்தி டிவி சேனல்களில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமாகி பெரும் வரவேற்பு பெற்றது.
தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, டிவி பார்க்காத பழக்கம் இல்லாதவர்களையும் டிவி முன் உட்கார வைக்க, நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றது. மேலும், நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களும் பெரிய அளவில் பிரபலமாக அவர்களுக்கு சினிமா, விளம்பரப் படம் வாய்ப்புகள் என்று பிஸியாகிவிட்டார்கள்.
அப்படி பிஸியானவர் தான் ஓவியா. பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த ஓவியாவுக்கு பிக் பாஸ் மூலம் புது அந்தஸ்து கிடைத்ததோடு, புது ரசிகர் ராணுவமே கிடைத்தது. இருந்தாலும் போட்டியில் இருந்து அவர் பாதியில் வெளியேறியதால் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். இருந்தாலும், மக்கள் மனதில் தற்போது அவர் தான் பிக் பாஸ் வெற்றியாளர்.
இப்படி அமோக வரவேற்போடு முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடிகை ரித்விகா போட்டியாளராக அறிவிக்கப்பட்டார். இவரும் மக்களின் பேராதரவு பெற்ற போட்டியாளராகவே வலம் வந்தார்.
இந்த நிலையில், பிக் பாஸ் முதல் சீசன் மூலம் ஓவியாவுக்கு எந்த அளவுக்கு மக்கள் மத்தியிலும், சினிமா மற்றும் விளம்பரப் பட உலகிலும் வரவேற்பு கிடைத்ததோ அதே அளவுக்கு ரித்விகாவுக்கும் கிடைத்திருக்கிறது. பல பட வாய்ப்புகளை பெற்றுள்ள ரித்விகா, பிக் பாஸ் போட்டி முடிந்த பிறகு ஓவியாவுக்கு கிடைத்த சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரப் பட வாய்ப்பு, தற்போது ரித்விகாவுக்கும் கிடைத்திருக்கிறது.
இனி, சரவணா ஸ்டோர்ஸ் ஆடைகளை அணிந்துக் கொண்டு நடனம் ஆடும் நடிகைகளில் ரித்விகாவும் ஒருவராக திகழப்போகிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...