பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை மிகவும் அவசியம், அதிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை தற்போதைய காலக்கட்டத்தில் மிக மிக அவசியம், என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. கடந்த விழாயக்கிழமை வெளியான இப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புக்கலை கற்றுக் கொடுக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு ‘எழுமின்’ திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். மக்களை மட்டும் இன்றி அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படக் குழுவினர் தற்போது பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
விவேக், தேவயானி மற்றும் ஆறு சிறுவர்கள் படத்தின் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘எழுமின்’ படத்தை இயக்கி தயாரித்திருக்கும் வி.பி.விஜி, தமிழக அரசின் அறிவிப்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். இது குறித்து கூறிய அவர், “இன்றைய சூழலில் தற்காப்புக்கலை எத்தனை அவசியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் எடுக்கப்பட்ட எங்களின் எழுமின் திரைப்படம் வெளியாகி வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு சார்பில் பள்ளிக்கூட மாணவிகளுக்கு அடுத்த வாரத்தில் இருத்து கராத்தே உள்ளிட்ட தற்காப்புக்கலை கற்றுக்கொடுக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கும் ’எழுமின்’ படக்குழுவினர் சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம், இந்த அறிவிப்பு எங்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது, எங்கள் படத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...