விஜய் டிவி-ன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், திரைப்படங்களிலும் பாடி வந்த நிலையில் ‘கரிமுகன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார்.
செந்தில் கணேஷுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கும் இப்படத்தில் யோகி ராம், பாவா லட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ, ரா.கா.செந்தில் ஆகியோர் நடிக்க, இவர்களுடன் இயக்குநர் செல்ல.தங்கையா முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
எழில் பூஜித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பன்னீர் செல்வம், கேசவன் ஆகியோர் எடிட்டிங் செய்ய, நித்தியானந்த் கலையை நிர்மாணித்திருக்கிறார். சங்கர்.ஆர் நடனம் அமைக்க, தில்லர் முருகன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். சுப்ரமணியம் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க, ஏ விமல் புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.சித்திரைச்செல்வி, எம்.செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து செல்ல.தங்கையா இயக்கியிருக்கிறார்.
படம் குறித்து கூறிய இயக்குநர் செல்ல.தங்கையா, “கரிமுகன் படத்திற்காக திருக்கோளக்குடி என்ற கிராமத்தில் உள்ள பெரிய மலையில் ஒரு காதல் காட்சிக்காண படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அமைதியான அந்த காட்டுப்பகுதியில் திடீரென்று ஸ்பீக்கர் சத்தம், நாங்கள் மைக்கில் பேசிய சத்தம் கேட்டு தேனீக்கள் படக்குழுவினரை துரத்தி துரத்தி கொட்ட ஆரம்பித்து விட்டது. தேனீக்கள் கொட்டியதால் நான் உட்பட 15 பேர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டனர். உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவர்களை அருகில் இருந்த மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துவிட்டு. மறுநாள் பக்கத்தில் இருந்த வேறொரு மலையில் படிப்பிடிப்பை முடித்தோம்.” என்றார்.
”சின்ன மச்சான்..” பாடல் மூலம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் செந்தில் கணேஷ், செல்ல.தங்கையா கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘கரிமுகன்’ படத்தின் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், படம் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...