ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் எந்திரன் இரண்டாம் பாகமான ’2.0’ படத்தின் மேக்கிங் வீடியோவை விநாயகர் சதுர்த்தியன்று படக்குழுவினர் வெளியிட்டனர். பெரும் வரவேற்பு பெற்ற இந்த வீடியோ, ரசிகர்களிடம் மட்டும் இன்றி திரையுலகினரிடையும் அதிர்வை ஏற்படுத்தியதோடு, வியாபாரத்திற்கும் பெரிதும் பயன்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே படத்தின் வியாபாரமும் ஒரு பக்கம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மற்றும் ஆந்திரா வெளியீட்டு உரிமம் மட்டும் ரூ.81 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படமும் இந்த தொகைக்கு விற்பனையானதல்ல என்பதோடு, ‘எந்திரன்’ படம் ரூ.27 கோடிக்கு தெலுங்கு ரைட்ஸ் விற்பனையாகியிருந்தது. தற்போது ‘2.0’ மூன்று மடங்கு அதிகமான தொகைக்கு விற்பனையாகியுள்ளது..
மொத்தத்தில், படம் ரிலிஸிக்கு பிறகே வசூலில் சாதனை செய்யும் படங்களுக்கு மத்தியில் ‘2.0’ ரிலிஸிற்கு முன்பாகவே வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனை செய்துள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...