Latest News :

’அட்டு’ ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகும் ‘மரிஜுவானா’!
Monday October-22 2018

வட சென்னையை மையமாக வைத்து வெளியாகி மக்களிடம் வரவேற்பு பெற்ற படம் ‘அட்டு’. இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரிஷி ரித்விக், முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக் திறமையோடு கையாண்டதோடு, அந்த கதாபாத்திரத்திற்காக பல விஷயங்களை ரியலாக செய்து பாராட்டு பெற்றார். அதிலும், அப்படத்தில் இடம்பெற்ற கத்தி சுற்றும் காட்சி ஒன்றை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது, அந்த அளவுக்கு அக்காட்சியின் ரிஷி மிரட்டியிருப்பார்.

 

தற்போது, பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ரிஷி ரித்விக், நடிப்பில் ‘மரிஜுவானா’ என்ற படம் உருவாகிறது. இதில் ஹீரோயினாக ஆஷா நடிக்கிறார். 

 

தேர்ட் ஐ கிரியேஷன்ஸ் (Third Eye Creations) சார்பில் எம்.டி.விஜய் தயாரிக்கும் இப்படத்தை எம்.டி.ஆனந்த் இயக்குகிறார்.

 

இப்படத்தின்  துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், சரவணன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், ராஜு முருகன், ஒளிப்பதிவாளர் செல்வா, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகையாளர் யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

 

Marijuwana

 

இயக்குநர் ராஜு முருகன் கிளாப் போர்டு அடிக்க படத்தின் முதல் காட்சி பதிவு செய்யப்பட்டது. மேலும், நடிகர் யோகி பாபு படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Related News

3640

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...