வைரமுத்து பாலியல் புகார் கூறும் சின்மயி, அதற்கான ஆதாரங்களை திரட்டி அவர் மீது வழக்கு தொடர இருப்பதாக கூறினாலும், 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது அவர் பெரிது படுத்துவது ஏன்? என்று தான் அனைவரும் கேட்கிறார்கள். அதேபோல், சின்மயின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல பிரபலங்கள் கருத்து கூறுவதோடு, வைரமுத்து பற்றியும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுகிறார்கள்.
அந்த வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி, ஏ.ஆர்.ரஹானா, வைரமுத்து குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து கூறிய ஏ.ஆர்.ரஹானா, “நான் சின்மயி சொல்வதை நம்புகிறேன். ஆனால் அவர் இத்தனை ஆண்டுகள் கழித்து பேசுவது தான் பிரச்சனையே. 15 ஆண்டுகள் கழித்து பேசுகிறாரே சைக்கோவாக இருப்பார் போல. கோபம் என்றால் அன்றைக்கே வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாகவா அமைதியாக இருப்பது.
வைரமுத்துவின் பெயரை கெடுக்க சின்மயி இப்படி செய்யவில்லை. எதற்காக 15 ஆண்டுகள் சும்மா இருந்தீர்கள் என்பதே என் கேள்வி?. எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் வைரமுத்து பற்றி பல விஷயங்கள் கேள்விப்பட்டுள்ளேன். அவர் எப்படிப்பட்டவர் என்பது திரைத்துறையில் உள்ள அனைவருக்கம் தெரியும். இது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான்.
வைரமுத்துவை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருந்திருக்க வேண்டும். அவரை இந்த அளவுக்கு வளர விட்டிருக்கக் கூடாது. அவரை சின்மயி தன் திருமணத்திற்கு அழைத்து ஆசிர்வாதம் வாங்கியது எல்லாம் தேவையில்லாதது. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அது ஏன் வைரமுத்துவை மட்டும் டார்கெட் செய்ய வேண்டும். பல பாடகர்கள் மீது புகார்கள் எழுந்துள்ளது. அவற்றையும் பெரிய அளவில் கவனிக்க வேண்டும். வைரமுத்து பற்றி ரஹ்மானுக்கு தெரியாது. ஏனென்றால் அவர் கிசுகிசுக்களில் இருந்து தள்ளியே இருப்பவர். பல பெண்கள் என்னிடம் வைரமுத்து பற்றி தெரிவித்துள்ளனர்.” என்றார்.
ஏ.ஆர்.ரஹானா வைரமுத்து பற்றி இப்படி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, சின்மயி விவகாரத்தில் வைரமுத்து அப்படி நடந்திருக்கலாம், என்பதையும் உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...