Latest News :

அஞ்சலியுடன் தாய்லாந்துக்கு பறந்த விஜய் சேதுபதி!
Tuesday October-23 2018

’96’ படத்தின் வெற்றியால் பெரும் உற்சாகமடைந்திருக்கும் விஜய் சேதுபதியின் கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது. ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்கள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விஜய் சேதுபதியை வைத்து ‘பண்ணையாறும் பத்மினியும்’, ‘சேதுபதி’ என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் அருண்குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கிறார்.

 

’பாகுபலி 2’ படத்தை வெளியிட்டு பெரும் வெற்றிக் கண்டதோடு, யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தை தயாரித்து தயாரிப்பில் மிகப்பெரிய வெற்றியைக் கண்ட கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும், யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கின்றது.

 

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டில் படமாகிறது. அந்த அளவுக்கு கதையும், சூழலும் அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்துவதாக இயக்குநர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

 

தென்காசி, குற்றாலம் போன்ற பகுதிகளில் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு  தொடர்ந்து 30 நாட்கள் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியுள்ளது. அங்கு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ள படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, அஞ்சலி பங்கேற்கிறார்கள்.

 

கமர்ஷியல் பார்முலாவுடன் கூடிய வித்தியாசமான படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

 

விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரூபன் எடிட்டிங் செய்கிறார். சிவசங்கர் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, எஸ்.என்.ராஜராஜன், யுவன் சங்கர் ராஜா, இர்பான்மாலிக் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

Related News

3645

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...