யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘கூர்கா’ படத்தில் அவர் தான் ஹீரோ என்று தகவல் பரவிய நிலையில், அதை மறுத்த யோகி பாபு, தான் ஒரு முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன், படத்திற்கு ஹீரோ வேறு ஒருவர், என்று விளக்கம் அளித்திருந்த நிலையில், அப்படம் குறித்த மற்றொரு தகவலும் தற்போது வேகமாக பரவி வருகிறது.
அதாவது, ‘கூர்கா’ படத்தில் கனடா நாட்டை சேர்ந்த எலிஸ்ஸா என்ற மாடல் நடிக்கிறார். இவர் யோகி பாபுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், இது குறித்து இயக்குநர் சாம் சாண்டனிடம் கேட்டதற்கு, “கதாபாத்திரம் மற்றும் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு ஆடிஷனில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்த பட வாய்ப்பை எலிஸ்ஸா தன் வசப்படுத்தி இருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல, அவர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. காதல் காட்சிகளிலும் நடிக்கவில்லை. அவர் அமெரிக்க தூதர் வேடத்தில் நடிக்கிறார்.” என்றார்.
தற்போது அதர்வா முரளியின் ‘100’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் இயக்குநர் சாம் ஆண்டன், ‘கூர்கா’ படப்பிடிப்பை வரும் டிசம்பர் மாதம் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.
4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்கிறார். இவர்களுடன் மேலும் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...