ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியின் மூன்றாவது படமான ‘சர்கார்’ அரசியல் பின்னணி கதை என்பதால் ரசிகர்களிடம் மட்டும் இன்றி அரசியல் தலைவர்களிடமும், பொது மக்களிடலும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வரலட்சுமி அரசியல் வில்லியாக நடித்திருப்பதால், தமிழகத்தில் நடைபெற்ற திடீர் அரசியல் மாற்றம் பற்றி படத்தில் பேசியிருப்பார்களோ! என்றும் மக்கள் யோசிக்க தொடங்கி விட்டார்கள். இப்படி படத்திற்கு ஏற்பட்ட பலமான எதிர்ப்பார்ப்பினால், சர்கார் படத்துடன் வேறு எந்த படமும் போட்டியிடவில்லை.
கடந்த தீபாவளிக்கு எப்படி மெர்சல் வெளியாகி மெகா ஹிட்டானதோ அதைவிட இந்த தீபாவளிக்கு சர்கார் மிகப்பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் அடிபடுவதால் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் குஷியில் இருக்கிறார்கள். இவர்களது சந்தோஷத்திற்கு திஷ்ட்டியாக கதை திருட்டு விவகாரம் பூதாகரமாகியிருப்பது ஒரு பக்கம் படக்குழுவினருக்கு கவலை அளித்து வந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளியன்று வெளியாக இருந்த ‘சர்கார்’ படத்தை தீபாவளிக்கு முன்னதாக நவம்பர் 2 ஆம் தேதியே ரிலீஸ் செய்யும் முடிவுக்கு தயாரிப்பு தரப்பு வந்திருப்பதாக கூறப்படுகிறது. 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால், சனி, ஞாயிறு என்று தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால், அப்போது படத்தை ரிலீஸ் செய்தால், வசூலை அள்ளு அள்ளு என்று அள்ளிவிடலாம், என்று தயாரிப்பு தரப்பு திட்டம் போடுவதாக கூறப்படுகிறது. இதற்காக, படத்தை முன் கூட்டியே சென்சாருக்கு அனுப்ப இருக்கிறார்களாம்.
6 ஆம் தேதியாக இருந்தால் என்ன அல்லது 2 ஆம் தேதியாக இருந்தால் என்ன, எப்போது வெளியானாலும் தங்களது கொண்டாட்டத்தில் குறை இருக்காது என்ற முடிவுக்கு விஜய் ரசிகர்களும் வந்துவிட்டார்களாம்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...