பாலிவுட்டில் ஆரம்பித்த பாலியல் புகார் விவகாரம் பாடகி சின்மயி மூலம் தமிழ் சினிமாவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பலர் மீது பாலியல் புகார் கூறப்பட்டு மீ டூ என்ற வார்த்தை கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த மீ டூ விவகாரத்தில் சமீபத்தில் சிக்கியவர் நடிகர் தியாகராஜன். கடந்த 40 வருடங்களாக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டவராக திகழும் தியாகராஜன் மீது பிரித்திகா மேனன் என்ற புகைப்படக் கலைஞர் பாலியல் புகார் தெரிவித்தார். படப்பிடிப்பின் போது தியாகராஜன் தனது அரை கதவை தட்டியதாக, பிரித்திகா மேனன் புகார் கூறினார்.
பிரித்திகா மேனனின் இந்த புகாரை மறுத்த தியாகராஜன், நேரடியாக பத்திரிகையாளர்களை சந்தித்தத்தோடு, அந்த பிரித்திகா மேனன் குறித்து சில தகவல்களை கூறியதோடு, ‘பொன்னர் சங்கர்’ திரைப்படத்தின் போர் காட்சி ஒன்றை திரையிட்டார். பிரம்மாண்டமான அந்த காட்சியை சுமார் 3 ஆயிரம் கலைஞர்களைக் கொண்டு பல நாட்கள் படமாக்கியதாக கூறிய தியாகராஜன், அந்த காட்சி படமாக்கப்பட்ட போது இரண்டு நாட்களுக்கு புகைப்பட கலைஞராக பிரித்திகா மேனன் பணிபுரிந்ததோடு, அப்போது எடுத்த புகைப்படங்களோடு அவர் தீடீரென்று மாயமாகிவிட்டார். பிறகு நாங்களும் விட்டுவிட்டோம். அந்த போர் காட்சி எடுத்த போது, தூங்க கூட நேரம் இல்லாமல் நான் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு சூழலில் இப்படி செய்துவிட்டேன், என்று மீது அந்த பெண் புகார் கூறியதை என்னை மிகவும் பாதித்துவிட்டது, என்றும் கூறினார்.
மேலும், பிரித்திகா மேனன் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க இருக்கிறேன், அதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது, என்றும் தெரிவித்தார்.
தியாகராஜனோடு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட நடிகர் ராதாரவி, “மீ டூ என்பது பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட நல்ல இயக்கம், ஆனால் அதை பல பெண்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதிலும் சினிமாவில் தான் இந்த மீ டூ ரொம்ப தவறாக பயன்படுத்தப்படுகிறது. நண்பர் தியாகராஜன் பல ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். அவருக்கு குடும்பம் இருக்கிறது. சினிமா துறையில் மரியாதை உள்ள மனிதர். அப்படி இருக்கும் போது இந்த தவறான புகாரால் அவர் மனம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும். இந்த நிலமை நீடித்தால் சினிமாவில் ஆண்களே பெண்கள் வேடம் போட்டு நடிக்கும் நிலை வரலாம். யார் மீதும் யார் வேண்டுமானாலும் புகார் கூறி அது பத்திரிகைகளில் வெளியாவது தொடர்ந்தால், நாளைக்கு சினிமாவுக்கு மட்டும் அல்ல, பெரிய பெரிய மனிதர்கள் மீது கூட சர்வசாதாரணமாக புகார் கூறுவார்கள், அவமானப்படுத்துவார்கள் பிறகு இதை வைத்தே பிளாக் மெயில் பண்ணுவார்கள். இப்பொது அப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த நிலை மாற வேண்டும், யார் புகார் கூறினாலும், அதை பத்திரிகையாளர்கள் இரண்டு தரப்பிலும் விசாரித்துவிட்டு செய்தி போடுவது நல்லது.” என்றார்.
இந்த நிலையில், தியாகராஜன் மீது புகார் கூறிய பிரித்திகா மேனனின் பேஸ்புக் பக்கம் திடீரென்று மாயமாகியுள்ளதை நமக்கு தெரிவித்த தியாகராஜன் தரப்பு, அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் பிரித்திகா மேனன் தியாகராஜன் மீது கூறியது பொய்யான புகார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...