தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும், அவர் ரசிகர்களும் வேண்டாம், அவர்களது தொல்லையும் வேண்டாம் என்று கூறி ஒதுங்கிவிட்டார். அஜித் என்னதான் ஒதுங்கினாலும், அவரது படத்தின் ரிலிஸின் போதும், அவரது பிறந்தநாளன்றும் ஏன் அவரது குழந்தைகளின் பிறந்தநாள் வந்தால் கூட அதை கொண்டாடாமல் அஜித் ரசிகர்கள் இருந்ததில்லை.
இப்படி அஜித் வேண்டாம்...வேண்டாம்...,என்று விலகினாலும் அவரது ரசிகர்கள அவரை தல என்று கொண்டாடியே வருகிறார்கள். இப்படி அஜித்தை கொண்டாடும் அவரது ரசிகர்கள் தற்போது பெரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். இதற்கு காரணம், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் தான்.
சிவா இயக்கத்தில் தொடர்ந்து மூன்று படங்களில் நடித்த அஜித், அப்படங்களின் மூலம் பெரிய வெற்றி கொடுக்கவில்லை என்றாலும், தற்போது நான்காவது முறையாகவும் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கு காரணம் ‘விவேகம்’ படத்தின் தோல்வி தான். அப்படத்தின் தோல்வியால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்ட்டத்தை ஈடு கட்டுவதற்காகவே, அஜித்தும், இயக்குநர் சிவாவும் இணைந்து சத்ய ஜோதி நிறுவனத்திற்கு ‘விஸ்வாசம்’ படத்தை எடுத்துக் கொடுக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும், விஸ்வாசம் படத்தில் அஜித்தும், இயக்குநர் சிவாவும் ஈடுபாட்டோடு பணிபுரியாமல், ஏதோ கடமைக்கு பணிபுரிகிறார்களோ! என்று எண்ணும் அளவுக்கு அப்படத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் ரொம்ப சொதப்பலாகவே இருக்கிறது.
முதலில் தீபாவளியன்று படத்தை வெளியிட முடிவு செய்தவர்கள், படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதாக அறிவித்தார்கள். மேலும், படத்தின் பஸ்ட் லுக்கும் ரொம்ப மொக்கையாக இருந்தது. ஊதிய கண்ணத்தோடு, வெள்ளை தாடியில் முறுக்கு மீசை வைத்தது போல், அஜித்தின் க்ளோஷப் புகைப்படத்தோடு வெளியான பஸ்ட் லுக் போஸ்டர் அவ்வளவாக எடுபடாமல் போய்விட்டது.
இந்த நிலையில், இன்று வெளியான விஸ்வாசம் இரண்டாவது லுக் போஸ்டரும் ரொம்பவே மொக்கையாக இருக்கிறது. ”ரசிகர்கள் டிசைன் செய்தாலே நல்லா செய்திருப்பாங்க, இப்படி பண்ணீட்டாங்களே” என்று பலர் சமூக வலைதளங்களில் விஸ்வாசம் இரண்டாவது போஸ்டரை கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். இதனால், அஜித் ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகியுள்ளார்கள்.
போஸ்டரையே இப்படி மொக்கையாக வெளியிடும் இயக்குநர் சிவா, படத்தை என்ன செய்திருப்பாரோ! என்ற அச்சத்துடன் தான் விஸ்வாசம் படத்திற்காக அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...