கார்த்தியின் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘தேவ்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா நேற்று வெளியிட்டார். கார்த்தி இதுவரை இல்லாத அளவுக்கு அவரை ரொம்பவே ஸ்டைலிஷாக காட்டும் தேவ் படத்தின் பஸ்ட் லுக் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
காதல், ரொமான்ஸ் மட்டுமில்லாமல் ஒரு இளைஞர் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்த மாதிரியான சவால்களை எதிர்த்து போராடுகிறான் என்பதே கார்த்தியின் கதாபாத்திரம். இதற்கிடையில் தற்போதுள்ள
இளைஞர்களுக்கு இருக்கும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார். ராமலிங்கம் என்ற தன் பெயரோடு தன்னுடைய அபிமான கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பெயரை சேர்த்து தேவ் ராமலிங்கம் என்று மாற்றிக் கொள்கிறார். சுருக்கமாக தன் பெயரை ‘தேவ்’ என்று மாற்றிக் கொள்கிறார் கார்த்தி.
கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். பெயருக்கு கதாநாயகி என்றில்லாமல் கார்த்திக்கிற்கு இணையாக முக்கியத்துவம் இவருக்கு இருக்கும். பல காட்சிகளில் தனது அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். அந்த காட்சிகளில் எல்லாம் அனைவரின் பாராட்டையும் பெறுவார்.
மேலும் இப்படத்தில் கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ்-ம், ரகுல் ப்ரீத் சிங்-ன் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, ‘ஸ்மைல் சேட்டை’ விக்னேஷ், அம்ருதா, வம்சி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இவர்களுடன் ‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் கதையை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் கூறி முடித்ததுமே என்னை கட்டியணைத்துக் கொண்டார். இப்படத்தில் என்னுடைய பங்கு நிச்சயம் இருக்கும் என்றார். 5 பாடல்களைக் கொண்ட ‘தேவ்’ படம் இசைக்கு விருந்தளிக்கும் விதமாகவும் இருக்கும். அதன்பின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் கூறியபோது அவரும் ஒப்புக் கொண்டார். இவர் சமீபத்தில் வெளியான கார்த்தியின் கடைகுட்டி சிங்கம் படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். காட்சிக்கேற்ப கார்த்தியை வித்தியாசமாகவும், ரசிக்கும்படியாகவும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்வதில் வல்லவர். வேல்ராஜுக்கு கார்த்தியுடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதல் தோற்றத்தைப் பார்க்கும் போதே, நாடெங்கிலும் உள்ள மூலை முடுக்கிலும் ‘தேவ்’ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் தயாரிக்கும் ‘தேவ்’ படத்தின் டீசர் மற்றும் ஆடியோ விரைவில் வெளியாக உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...