இயக்குநர் அமீர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் வேடத்தில் நடிக்கும் படத்திற்கு ‘எம்.ஜி.ஆர் பாண்டியன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் இயக்கி தயாரிக்கும் ஆதம் பாவா, படம் குறித்து கூறுகையில், “இத்திரைப்படம் அமைதிப்படைக்குப்பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும். எம் ஜி ஆர் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் இவ்வேளையில் ஒரு உண்மையான எம் ஜி ஆர் ரசிகனை இப்படத்தில் காணலாம். அமீரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது.” என்றார்.
ஆனந்தராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான அண்ணாச்சி, மகதி சங்கர், ராஜ்கபூர், கசாலி, ராஜசிம்மன், சம்பத்ராம், பாவா லஷ்மணன், வின்செண்ட் ராய், செவ்வாழை, சுஜாதா, ஜீவிதா, சரவண சக்தி ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் சாந்தினி ஹீரோயினாக நடிக்கிறார்.
தேவராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வித்யாசகர் இசையமைக்க, வைரமுத்து, பா.விஜய் பாடல்கள் எழுதுகிறார்கள்.
இப்படத்தின் நான்கு கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், ஐந்தாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ‘வட சென்னை’, ‘சந்தனத்தேவன்’ ஆகிய படங்களில் அமீர் பிசியாகியுள்ளதால், இப்படங்களுக்கு இடையில் தேதிகள் பாதிக்காமல் ‘எம்.ஜி.ஆர் பாண்டியன்’ படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள ஆதம் பாவா, தேனி, மதுரை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்.
‘மெளனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’ என மிகச்சிறந்த படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்த அமீர், கடந்த 2009 ஆம் ஆண்டு ‘யோகி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பிறகு நடிப்பதை நிறுத்தி வைத்தவர், ஜெயம் ரவியை வைத்து இயக்கிய படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் படம் இயக்குவதையும் சில ஆண்டுகள் நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில், ஆர்யா, சத்யா ஆகியோரை வைத்து ‘சந்தனத்தேவன்’ படத்தை இயக்கி வரும் அமீர், அப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...