Latest News :

பிரேமமான நடிகைக்கு சொகுசு கார் வாங்கிக்கொடுத்த பிரபல இயக்குநர்!
Saturday October-27 2018

ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த பல நடிகர்கள் இருப்பது போல, ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் நடிகர்களையும், இயக்குநர்களையும் கவர்ந்த சில நடிகைகளும் இருக்கிறார்கள். இந்த செய்தியும் அப்படிப்பட்ட ஒரு நடிகையை பற்றியது தான்.

 

பிரேமமான படத்தின் மூலம் டீச்சராக அறிமுகமான அந்த முகப்பறு நடிகை, தனது முதல் படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமா சினிமா முழுவதும் பிரலமாகிவிட்டார். இந்த ஹீரோ படத்தின் நடிக்கப் போகிறார், அந்த ஹீரோ படத்தில் நடிக்கப் போகிறார், என்று தமிழ் சினிமாவில் அவ்வபோது அவர் பற்றி செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று தெலுங்கில் களம் இறங்கினார். அவரது முதல் தெலுங்குப் படமே மிகப்பெரிய வெற்றிப் பெற்றதால், தமிழ் சினிமாவில் அவருக்கான மவுசு அதிகரிக்கத் தொடங்கியது. எப்படியாவது அவரை தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பல இயக்குநர்கள் முயற்சித்த நிலையில், சாந்தமான குணம் கொண்ட அந்த விஜயம் இயக்குநருக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது.

 

இரண்டு எழுத்துக் கொண்ட மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், அந்த பிரேமமான நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களத்தைக் கொண்ட படத்தை இயக்குநர் இயக்கினார். அந்த படத்தின் தலைப்பும் இரண்டு எழுத்து தான். படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றிப் பெறவில்லை என்றாலும், நடிகையின் மவுசு மட்டும் குறையவில்லை. தற்போதும் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க பல தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தாலும் நடிகை சில குறிப்பிட்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். ஏன்? எப்படி என்று விசாரித்ததில், அந்த சாந்தமான வெற்றியின் அடையாளமாக பெயர் கொண்ட இயக்குநர் நடிகையை தனது காதல் வலையில் சிக்க வைத்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

 

ஏற்கனவே நடிகை ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நடிகருக்கு வீட்டில் பெண் பார்ப்பதாக பரவிய தகவலை அந்த இயக்குநர் மறுத்திருந்த நிலையில், தற்போது பிரேமமான நடிகையுடன் காதல் வயப்பட்டிருப்பதாக புதிய தகவல் பரவுகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, அந்த இயக்குநர், அந்த நடிகைக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்.


Related News

3679

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery