Latest News :

சைபர் கிரைம் ஆபத்து! - பெண்களை எச்சரிக்கும் ‘எவனும் புத்தனில்லை’
Sunday October-28 2018

மக்களை மகிழ்விக்கும் கமர்ஷியலான திரைப்படங்களாக மட்டும் இன்றி, கல்வி முறை, குழந்தை வளர்ப்பு, பெண்களின் பேராசையால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினை, என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான படங்களாக, தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், ஸ்மார்ட்போன் மற்றும் இணையதளம் மூலம் ஏற்படும் ஆபத்து, அதிலும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்தை பற்றி பேசும் விழிப்புணர்வு படமாகவும், அதே சமயம் இளைஞர்களுக்கான கமர்ஷியல் படமாகவும் உருவாகும் படம் தான் ‘எவனும் புத்தனில்லை’.

 

இப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், தளபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்டனர்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் எஸ்.விஜயசேகரனிடம் படம் குறித்து கேட்ட போது, “சைபர் க்ரைம் பற்றிய கதை இது. இன்று ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் இருந்தால் உள்ளங்கையில் உலகே வந்துவிடுகிறது. ஆனால், அப்படிப்பட்ட வசதியால் நமக்கு எப்படிப்பட்ட ஆபத்துகள், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எந்த மாதிரியான ஆபத்துகள் இருக்கிறது, என்பதை தான் படத்தில் சொல்லியிருக்கிறோம்.

 

சாதாரணமாக பெண்கள் சமூக வலைதளங்களில் அப்லோட் செய்யும் அவர்களது புகைப்படங்களை, சைபர் குற்றவாளிகள் மாபிங் செய்து அதை ஆபாசமாக சித்தரித்து பணம் சம்பாதிக்கிறார்கள். இதன் மூலம் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். உட்கார்ந்த இடத்திலேயே ஒருவரை தற்கொலை செய்ய தூண்டும் அளவுக்கு இந்த சைபர் குற்றவாளிகள் செயல்படுகிறார்கள். இதனை தான் உலகுக்கு சொல்வதோடு, மக்களை எச்சரிக்க செய்வதோடு, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போலவும் படம் இருக்கும். அதே சமயம், படம் முழுவதும் கமர்ஷியலாக இளைஞர்களுக்கு பிடித்தது போல இருக்கும்.

 

நான் கடவுள் ராஜேந்திரன் படத்தில் முக்கியமான வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதேபோல், மாரிமுத்து, வேல.ராமமூர்த்தி என்று பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

மலைவாழ் மக்களில் ஒருவர் தான் ஹீரோ. அவர் சென்னைக்கு படிப்புக்காக வருகிறார். அப்படி வரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை படத்தில் சொல்லியிருக்கிறோம். மலைவாழ் இனத்தை சேர்ந்தவர் தான் ஹீரோ என்பதால் அதற்கு ஏற்றவாறு ஒரு புதுமுகத்தை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். மலைவாழ் மக்கள் போஷனை 6 ஆயிரம் உயரமுள்ள மலை ஒன்றில் படமாக்கியுள்ளோம். வாகனம் செல்லும் வசதி இல்லாத அப்பகுதிக்கு நடந்தே சென்று படமாக்கினோம். பனி அடர்ந்த அந்த மலை மீது படப்பிடிப்பு நடத்த சிரமாக இருந்தாலும், படக்குழுவினர் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படத்தில் அந்தக் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும்.” என்றார்.

 

Yevanum Buthanillai

 

வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்தில் நபி நந்தி, சரத் இருவரும் ஹீரோக்களாக நடிக்க, சுவாசிகா, நிகாரிகா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். கெளரவ வேடத்தில் பூனம் கவுர் மற்றும் பாடலாசிரியர் சினேகன் நடிக்கிறார்கள். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், சங்கிலிமுருகன் எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, சிங்கமுத்து, முரு ஆரு, கே.டி.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, பசங்க சிவக்குமார், சுப்புராஜ், எம்.கார்த்திகேயன், காதல் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

ராஜா சி.சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு மரியா மனோகர் இசையமைத்திருக்கிறார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்ய, சினேகன் பாடல்கள் எழுதியுள்ளார். எஸ்.டி.சுரேஷ்குமார் வசனம் எழுத, அன்பறிவு, மிராக்கல் மைக்கேல் ஆகியோர் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். அசோக்ராஜா மற்றும் சங்கர் நடனம் அமைக்க, ஏ.பழனிவேல் கலையை நிர்மாணித்திருக்கிறார். 

 

கே.டி.பாஸ்கர், கே.சுப்ரமணியன், ஐ.ஜோசப் ஜெய்சிங், எம்.கார்த்திகேயன், வி.சி.சூரியன் ஆகியோரின் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ‘எவனும் புத்தனில்லை’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் விரைவில் படம் திரைக்கு வர உள்ளது.

Related News

3681

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery