தீபாவளியன்று வெளியாக உள்ள விஜயின் ‘சர்கார்’ படத்தின் கதை வருண் ராஜேந்திரன் என்பவரது கதை என்றும், அதை திருடி முருகதாஸ் ‘சர்கார்’ என்ற பெயரில் திரைப்படமான எடுத்து வருகிறார் என்றும் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் கூறி வருவதோடு, இரண்டு கதைகளையும் படித்துவிட்டு இரண்டும் ஒரே கதை தான், என்று தீர்ப்பளித்ததோடு, பல ஊடகங்களில் இது குறித்து பேட்டியும் கொடுத்து வருகிறார்.
பாக்யராஜின் குற்றச்சாட்டை மறுக்கும் முருகதாஸ், பாக்யராஜ் ஒருதலை பட்சமாக நடந்துக்கொள்கிறார். செங்கோல் என்ற கதையை படித்தவர், எனது முழுமையான கதையை படிக்காமலேயே படித்ததாக சொல்வதோடு, என்னிடம் விசாரணை நடத்தாமல், விசாரித்து விட்டதாகவும் கூறி வரும் முருகதாஸ், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அனுக போவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், முருகதாஸின் முந்தைய திரைப்படங்களான ‘கத்தி’, ‘தீனா’ உள்ளிட்ட படங்களும் திருடப்பட்ட கதை தான் என்று பலர் கூறி வருகிறார்கள். மேலும், சர்கார் படத்திற்குப் பிறகு முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருந்ததாகவும், ஆனால், தற்போது நடைபெற்று வரும் கதை திருட்டு பஞ்சாயத்தால், முருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க மாட்டார், என்றும் கூறுகிறார்கள்.
ரஜினி மட்டும் அல்ல மேலும் சில முன்னணி ஹீரோக்களும், புலி வந்தால் எப்படி தெரித்து ஓடுவார்களோ அதுபோல் முருகதாஸ் என்றால் தெரித்து ஓட தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து தனது பட வெளியீட்டில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் விஜய், இந்த விவகாரத்தால் ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.
இதற்கிடையே, ராஜேந்திரன் என்பவர் சர்கார் கதை திருட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று வருகிறது.
அதேபோல், சர்கார் கதை தனது தான் என்று கூறும் வருண் ராஜேந்திரனிடம் சமரசாம் பேசி, அவருக்கு ரூ.30 லட்சம் தருவதாக சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் பரவி வருகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...