கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் துனியா விஜய். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி நாகரத்னா தனது பிள்ளைகள் மோனிகா, மோனிஷா, சாம்ராட் ஆகியோருடன் தனியாக வசித்து வர, துனியா விஜய் இரண்டாவது மனைவி கீர்த்தி கவுடாவுடன் வசித்து வருகிறார்.
இதற்கிடையே, ஜிம் டிரெய்னரை தாக்கிய வழக்கில் கடந்த மாதம் துனியா விஜய் கைது செய்யப்பட்டார். இந்த கைதுக்கு கீர்த்தி தான் காரணம், என்று கூறி அவரை நாகரத்னா தாக்கியுள்ளார். கீர்த்தியின் வீட்டுக்கு சென்ற நாகரத்னா, தனது செருப்பால் அவரை தாக்கியுள்ளார்.
நாகரத்னா கீர்த்தியை தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோவை பார்த்த போலீசார் தானாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
இது குறித்து நாகரத்னாவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்கு சென்ற போது, போலீஸ் வருவதை பார்த்த நாகரத்னாவின் மகள் கதவை திறக்காமல் இருந்துள்ளார். அந்த நேரத்தில் நாகரத்னா வீட்டை விட்டு வெளியேறியவர் தற்போது வரை தலைமறைவாக இருக்கிறாராம்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...