‘குற்றப்பரம்பரை’ படத்தின் விவகாரத்தில் இதுவரை அமைதிக்காத்து வந்த இயக்குநர் பாலா, தனது அதிடியை தொடங்கிவிட்டார். இப்பிரச்சினை குறித்து பத்திரிகையாளர்களிடம் நேற்று விளக்கம் அளித்த பாலா, இயக்குநர் பாரதிராஜாவுக்கு தான் எச்சரிக்கை விடுப்பதாகவும் அறிவித்தார். இதனால், கோடம்பாக்கத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
‘குற்றப்பரம்பரை’ படம் தனது கனவு படம் என்றும், அதை தான் மட்டுமே எடுக்க வேண்டும், என்ற ரீதியிலும் சமீபத்தில் பேசிய பாரதிராஜாவும், அப்படத்தின் கதையை எழுதியுள்ள ரத்னகுமாரும், தொடர்ந்து தன்னை விமர்சனம் செய்து வருவதை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது, என்று கூறிய பாலா, இது தான் பாரதிராஜாவுக்கும், ரத்னகுமாருக்கும் நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை, என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், ‘குற்றப்பரம்பரை’ என்ற தலைப்பில் நான் படம் எடுக்கவில்லை, அதே காளக்கட்டத்தில் நடந்த வேறு ஒரு சம்பவத்தை வைத்து, கற்பனையோடு உருவாக்கிய கதை ஒன்றை தான் படமாக எடுக்கிறேன். இதை பாரதிராஜாவிடம் வேறு ஒருவர் மூலம் தெரியப்படுத்தியும் விட்டேன். அவரிடம் நேரடியாக பேசுவதற்காக பல முறை போனில் தொடர்பு கொண்டால், அவர் போனை எடுக்காமல் நிராகரிக்கிறார். அதுமட்டும் இன்றி, என்னை குறித்து கடுமையான விமர்சனம் செய்து வருகிறார். இதை நான் நான்கு முறை பொருத்துக்கொண்டேன், இனியும் பொருத்துக் கொண்டிருந்தால், நான் எதற்கும் லாயக்கி இல்லாத மயுமட்டையாகிவிடுவேன், என்பதால் தான் இந்த விளக்கத்தையும், பாரதிராஜாவுக்கு எச்சரிக்கையும் விடுக்கிறேன், என்று பாலா கூறினார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...