நேற்று முன் தினம் நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டிக்கும், உம்மிடி கிரித்திஸுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அன்றை தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
காலை நடைபெற்ற திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக முன்னணி நடிகர்கள், நடிகைகள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
அதேபோல் தொல்.திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதற்கிடையே, ரஜினிகாந்த், விஜய் பங்கேற்கையில் அஜித் மட்டும் பங்கேற்காமல் விஷாலை அவதித்து விட்டார், என்று செய்திகள் பரவி வருகிறது.
ஆனால், அதைவிடவும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், விஷாலின் சொந்த அண்ணனான விக்ரம் கிருஷ்ணாவே அந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை என்பது தான்.
விஷாலுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்த விஷால் கிருஷ்ணா, தனது படங்கள் ஓடாத நிலையில் ஜி.கே.பிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் மூலம், விஷாலை ஹீரோவாக வைத்து படங்கள் தயாரிக்க தொடங்கினார். ‘திமிரு’ படத்தை தயாரித்த போது அதில் நடித்த ஸ்ரேயா ரெட்டியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட விக்ரம் கிருஷ்ணா, தொடர்ந்து விஷாலை வைத்து தயாரித்த பல படங்கள் தோல்வியடைந்தது.
இதையடுத்து7 விஷால் பிலிம் பேக்டரி என்ற சொந்த நிறுவனத்தை தொடங்கி விஷால், தான் நடிக்கும் படங்களை தயாரிக்க தொடங்கிவிட்டார்.
ஆனால் செய்தி இதுவல்ல, விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி திருமணத்தில், அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும், அண்ணி ஸ்ரேயா ரெட்டியும் பங்கேற்கவில்லை. திருமணத்திற்கு முன்பு நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சி, திருமணம், திருமண வரவேற்பு என்று எதிலுமே விக்ரம் கிருஷ்ணா - ஸ்ரேயா ரெட்டி ஜோடி பங்கேற்கவில்லை.
மொத்தத்தில், ஊர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் விஷால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை மட்டும் இன்னும் தீரவில்லை போலிருக்கிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...