ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம், எதிர்ப்பார்த்த அளவுக்கு படம் பெரிதாக இல்லை, என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதற்கிடையே, படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியல் மூலம் அதிமுக அரசை விஜயும், படமும் விமர்சித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் சிலர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இன்று அதிமுக தொண்டர்கள் பலர், தமிழகம் முழுவதும் ‘சர்கார்’ ஓடும் திரையரங்கங்கள் முன்னிலையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், மதுரை அண்ணா நகரில் உள்ள சினிபிரியா திரையரங்கம் முன்பு அதிமுக-வின போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா ஆகிய திரையரங்குகளில் ‘சர்கார்’ படத்தின் பிற்பகல் 2.30 காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது போல, தமிழகத்தின் மேலும் சில திரையரங்குகளிலும் சர்கார் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...