தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகையாக வலம் வந்த லட்சுமி ராமகிருஷ்ணன், ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் பிரபலமானதோடு, பல சர்ச்சைகளிலும் சிக்கினார்.
இதற்கிடையே நடிப்பதை குறைத்துக் கொண்டவர், ‘ஆரோகணம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்து தொடர்ந்து ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனின் அப்பா மரணம் அடைந்துவிட்டார். 97 வயதாகும் அவரது மரணத்தால், தங்களது குடும்பம் ஒன்று கூடியுள்ளதாக தெரிவித்திருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், தனது அப்பாவின் இறப்புக்காக சோகம் தானும், தனது குடும்பத்தாரும் சோகம் அனுசரிக்கவில்லை. மாறாக, அவரின் வாழ்க்கையை கொண்டாடுகிறோம், என்று தெரிவித்துள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவு விசித்திரமாக இருந்தாலும், பிராக்டிலாக இது தான் உண்மை, என்று அவரது ரசிகர்கள் அவரது பதிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...