90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்த பிரஷாந்த், மணிரத்னம், பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி என்று அத்தனை முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வந்ததோடு, பெரிய மார்க்கெட் உள்ள ஹீரோவாகவும் வலம் வந்தார். இவ்வளவு ஏன், அஜித், விஜய் ஆகியோரை விட பிரஷாந்த் தான் சீனியர் நடிகர் மட்டும் இன்றி, வெற்றிப் பட ஹீரோவாகவும் இருந்தார்.
ஆனால், திடீரென்று பிரஷாந்தின் மார்க்கெட் பெரும் சரிவை சந்தித்தது. அப்படி இருந்தும் ‘ஜீன்ஸ்’ படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த பிரஷாந்த், ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தின் மூலம் மீண்டும் வெற்றி ஹீரோவாக வலம் வந்தாலும், ஒரு சில படங்களுக்குப் பிறகு அவரது படங்கள் அனைத்தும் தோல்விப் படங்களாகவே இருந்ததால், அவரது மார்க்கெட் சரிவை சந்தித்தது. இதற்கிடையே, திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினையால் துவண்டு போன பிரஷாந்த், நடிப்புக்கு சற்று பிரேக் கொடுத்தாலும், தனது தந்தையின் இயக்கத்தில் அவ்வபோது சில படங்களில் நடித்தாலும் அப்படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தற்போது ‘ஜானி’ என்ற படத்தில் நடித்து வரும் பிரஷாந்த், தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்கிறார். ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் தெலுங்குப் படம் ஒன்றில் பிரஷாந்த் நடிப்பதாக தகவல் வெளியானதோடு, அப்படத்தில் பிரஷாந்த் தான் வில்லன் என்றும், அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும் கூறப்பட்டது.
ஆனால், தற்போது நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ஆம், ராம்சரணுக்கு நண்பர்களாக நான்கு பேர் வருகிறார்கள், அதில் ஒருவராக பிரஷாந்த் நடித்திருக்கிறார்.
இதை அறிந்த தமிழக ரசிகர்கள், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்த பிரஷாந்துக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா! என்று அதிர்ச்சியடைந்ததோடு, பெரும் கோபத்தோடு கமெண்ட் அடித்தும் வருகிறார்கள்.
இதோ அந்த கமெண்ட்,
டேய் போயபதி ஸ்ரீனுலு..அவர் யார் தெரியுமாடா:-// pic.twitter.com/L9cILmibHy
— புரட்சி கனல்💙 (@5haiju) November 9, 2018
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...