மலையாள நடிகையான வாணி விஸ்வநாத், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என சுமார் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆந்திர அரசியல் களத்தில் வாணி விஸ்வநாத் இறங்க முடிவு செய்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ வாக உள்ள ரோஜா பங்குபெறும் கூட்டத்திற்கு பெரிய அளவில் மக்கள் கூட்டம் கூடுகிறது. நன்றாக தெலுங்கு பேசுவதாலும், நடிகை என்பதாலும் ரோஜா கலந்துக் கொள்ளும் கூட்டங்களில் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டுபிடித்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ரோஜாவுக்கு போட்டியாக நடிகை ஒருவரை களம் இறக்க முடிவு செய்துள்ளது. அவர் தான் வாணி விஸ்வநாத்.
தற்போது தெலுங்குப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் வாணி விஸ்வநாத், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தனது அரசியல் ஆசை குறித்து சொல்லியிருக்கிறார். சரியான நேரம் வரும்போது அழைப்பு வரும், என்று பதிலளித்த சந்திரபாபு நாயுடு தற்போது வாணி விஸ்வநாத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னை வந்த தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகிகள் சிலர், சென்னையில் வாணி விஸ்வநாத்தை சந்தித்து பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து அமராவதியில் நடக்கும் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு தன்னை தெலுங்கு தேசம் கட்சியில் இணைத்துக் கொள்ளும் வாணி விஸ்வநாத், பிறகு அக்கட்சி கூட்டங்களில் ரோஜாவுக்கு போட்டியாக பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...