ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் ஆளும் அதிமுக அரசு, அக்காட்சிகளை நீக்க வலியுறுத்தியதோடு, படத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையே, நேற்று முதல் சர்கார் ஓடும் திரையரங்கங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக தொண்டர்கள் விஜய் பேனர்களை கிழித்தெரிந்தனர். இதையடுத்து, தமிழகத்தின் சில திரையரங்கங்களில் சர்கார் காட்சி நேற்று நிறுத்தப்பட்டது.
மேலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யுமாறு அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவரை நேற்று இரவு போலீசார் கைது செய்ய முயற்சித்ததாக தயாரிப்பு தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால், காவல் துறை இதனை மறுத்தது.
இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸை நவம்பர் 27 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் கிடைத்தபிறகு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...