பாலிவுட்டில் தொடங்கிய மீ டூ விவகாரம், தமிழ் சினிமாவிலும் பரபரப்பாக பேசப்பட்டது. அதுவும் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகாரை தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து தைரியமாக பேசி வந்தனர்.
இதற்கிடையே, மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன் கடந்த நான்கு ஆண்டுகளாக மீ டூ கொடுமையை தான் அனுபவித்து வருவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
’பீட்சா’, ‘சேதுபதி’, ‘சத்யா’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் ரம்யா நம்பீசன், மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் மீ டூ விவகாரம் தலை தூக்குவதற்கு முன்பாக மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக மலையாள நடிகைகள் பலர் குரல் கொடுக்க தொடங்கினார்கள். அதில் முக்கியமானவர் ரம்யா நம்பீசன்.
மலையாள நடிகர் சங்கத்தில் இருந்த ரம்யா நம்பீசன், மலையாள நடிகைகளுக்கு எதிராக நடிகர்கள் நடந்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கடந்த ஆண்டு சினிமா துறையில் உள்ள பெண்களுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், பெண்களுக்கு எதிராக சினிமா துறையில் ந டக்கும் விஷங்கள் பற்றி கேள்வி கேட்டதால், ரம்யா நம்பீசனுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த பட வாய்ப்பும் இல்லையாம். மீறி எதாவது படத்திற்காக அவரை அனுகினாலும், அந்த குழுவினரை சிலர் தடுத்து விடுகிறார்களாம்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...