கடந்த தீபாவளியை போல இந்த வருட தீபாவளிக்கும் தனது படத்தின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், மிகப்பெரிய வெற்றிப் படத்தை விஜய் கொடுத்திருக்கிறார். தற்போது வரை தமிழகம் முழுவதும் சர்கார் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.
இதற்கிடையே, சர்கார் படத்திற்கு எதிராக ஆளும் அதிமுக அரசு போராட்டங்கள் நடத்தி, படத்தின் பேனர்களையும், விஜய் போஸ்டர்களையும் கிழித்தது தொடர்பாக விஜய் பதில் ஏதும் பேசாமல் இருந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கைகளை ஏற்று படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை தயாரிப்பு தரப்பு நீக்கிவிட்டது.
இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் விஜய், நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கேக் வெட்டியுள்ளனர். இந்த கேக்கின் மூலமாக விஜய் அதிமுக அரசுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஆம், சர்கார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் விஜய் வெட்டிய கேக்கில், மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருட்களின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தான் தொடர்ந்து அரசை எதிர்த்து கேள்வி கேட்பதோடு, யார் என்ன செய்தாலும் தனது படங்களில் மட்டும் அல்ல, தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் அரசியல் இருக்கும் என்பதை விஜய் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...