நடிகர் பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் நிறுவனத்தின் தொடர் தோல்விக்கு, ஜோதிகா - ராதாமோகன் கூட்டணியின் ‘மொழி’ திரைப்படம் முறுப்புள்ளி வைத்தது. கடந்த 2007 ஆம் தேதி வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா - இயக்குநர் ராதா மோகன் கூட்டணி ‘காற்றின் மொழி’ படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள்.
வித்யா பாலன் நடிப்பில் இந்தியில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘துமாரி சூலு’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியான நாள் முதல், படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்த நாள் வரை, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டிரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, மூன்று நாட்களில் 30 லட்சம் பார்வையாளர்களை கடந்து தமிழ் சினிமாவையே திகழ்ப்பில் ஆழ்த்தியது.
லக்ஷ்மி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், விதார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் யோகி பாபு, சிம்பு ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
பாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட், கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் கோ.தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம்குமார், லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படம், வரும் நவம்பர் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. டிக்கெட் ரிசர்வேசன் நாளை (நவ.15) தொடங்குகிறது.
இந்த நிலையில், ஹெலோ எப்.எம்-க்கு ஜோதிகா அளித்திருக்கும் பேட்டியில் படம் குறித்து பேசியதோடு, தனது திருமண வாழ்க்கை, கணவர் சூர்யா, தனது ரீ எண்ட்ரி குறித்தும் பேசியிருக்கிறார்.
அப்போது, ஜோதிகாவிடம் “நிருபராக நீங்கள் யாரை பேட்டி எடுக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டதற்கு, “மறைந்த முன்னாள் முதல்வரை பேட்டி எடுக்க ஆசை” என்று பதில் அளித்தவர், தற்போது அது சாத்தியமில்லை, என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘காற்றின் மொழி’ படத்தில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியிருப்பதோடு, பாடல் பாடியதோடு, மிமிக்ரியும் செய்திருக்கிறாராம்.
கணவன் - மனைவி பந்தத்தைப் பற்றியும் பெண்களுக்கான விழிப்புணர்வு படமாகவும் அதே சமயம் பெறியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள ‘காற்றின் மொழி’ அனைவரையும் கவரும் மொழியாக இருக்கும் என்றும் ஜோதிகா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...