தமிழ் சினிமாவில் இன்று பல புதுப்படன்களுக்கு பூஜை போட்டிருப்பதோடு, பல அறிவிப்புகளும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. விஜயின் 63 வது படத்தின் பூஜை இன்று போடப்பட்டிருப்பதோடு, படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல், ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பூஜையுடம் இன்று நடைபெற்றுள்ளது. சிவகுமார் குடும்ப தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது.
இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று சற்று நேரத்திற்கு முன்பு அறிவித்துள்ளது. அதே பொங்கலுக்கு தான் அஜித்தின் ‘விஸ்வாசம்’ வெளியாக உள்ளது.
ரஜினிகாந்த், அஜித் ஆகியோரது படம் ஒரே நாளில் வெளியாவது இது தான் முதல் முறை என்றாலும், ரஜினியின் ‘பேட்ட’ படத்திற்கு தான் அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அஜித் - சிவா கூட்டணியில் தொடர்ந்து தோல்விப் படங்களாகவே வெளியாகிக் கொண்டிருப்பதால் ‘விஸ்வாசம்’ படத்தின் மீது அஜித் ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஈடுபாடு இல்லை, ஏன், அஜித்துக்கே அப்படத்தின் மேல் சொல்லும் அளவுக்கு ஈடுபாடு இல்லை என்று கூறப்படுகிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...