‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து ராஜேஷ்.எம் மற்றும் ரவிக்குமார் ஆகியோரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் ஒரு படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனமும், மற்றொரு படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் தயாரிக்கிறது.
இதற்கிடையே, ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். இப்படத்தடி 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக முன்னதாக தகவல் வெளியான நிலையில், தற்போது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவன் 24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.
24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிறுவனர் ஆர்.டி.ராஜா, என்றாலும் இந்த நிறுவனம் சிவகார்த்திகேயனின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகிறது. அதேபோல், ‘அறம்’ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், தற்போது நயந்தாரா நடிக்கும் ‘ஐரா’ படத்தை தயாரிப்பதோடு அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திலும் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளது.
கொடப்படி ஜே.ராஜேஷ் என்பவரது நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் நயந்தாராவுடையது என்றும் கூறப்படுகிறது. அவரது மேனஜர் பெயரில் நயந்தாரா இந்த நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
24 ஏ.எம் எப்படி சிவகார்த்திகேயனின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகிறதோ அது போல், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் நயந்தாராவின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை, என்றாலும் கோடம்பாக்கத்தில் இந்த இரு நிறுவனங்கள் குறித்தும் இப்படி தான் பரவலான தகவல்கள் உலா வருகின்றனர்.
அந்த வகையில் பார்த்தால், திரைப்படத்தில் ஹீரோ ஹீரோயினாக இணைந்த சிவகார்த்திகேயன் - நயந்தாரா தற்போது தொழில் ரீதியாகவும் இணைந்துவிட்டார்கள்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...