சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது பின்னணி வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்திருக்கும் படக்குழு அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டது.
இதற்கிடையே, அஜித்தின் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகியப் படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க இருப்பதாக கடந்த பல மாதங்களாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும், வினோத் அஜித்தை வைத்து இயக்க இருக்கும் படம் இந்தி படம் ஒன்றின் ரீமேக் என்றும் கூறப்பட்டது. இது குறித்து இயக்குநர் வினோத் தரப்பு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில், எச்.வினோத் என்ற பெயரில் உள்ள டிவிட்டர் பக்கத்தில் “தல 59 படம் ரீமேக் இல்லை” என்ற பதிவு வெளியாகி அது வைரலாக பரவியதோடு, பல இணையதளங்களில் செய்தியாகவும் வெளியானது.
ஆனால், இந்த தகவலை மறுத்திருக்கும் இயக்குநர் எச்.வினோத், ”எனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும். மற்றபடி என் பெயர் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் எனக்கு கணக்கு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று விளக்கம் அளித்துள்ளார்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...