கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் குட்டி ராதிகா. சில தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கும் இவர், ‘இயற்கை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானர். அதன் பிறகு ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் திடீரென்று காணாமல் போய்விட்டார்.
இதற்கிடையே, திடீரென்று குழந்தையோடு வந்து நின்ற குட்டி ராதிகா, தனது குழந்தைக்கு அப்பா, தற்போது கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருக்கும் குமாரசாமி தான் என்று கூறினார். குமாரசாமியும் இதை ஏற்றுக்கொண்டு, குட்டி ராதிகா தனது இரண்டாவது மனைவி என்று அறிவித்தார்.
முதல்வர் கணவருடன் தனது இல்லற வாழ்வை சந்தோஷமாக கழித்த குட்டி ராதிகா, நடிப்புக்கும் முழுக்கு போட்டுவிட்டார்.
இந்த நிலையில், தனது குழந்தை வளர்ந்துவிட்டதால் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள குட்டி ராதிகா, ’பைரவி தேவி’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இவர் ஹீரோயினாக நடிப்பார், என்று எதிர்ப்பார்த்தால், பார்ப்பவர்களை பயமுறுத்தும் அகோரி வேடத்தில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார்.
தற்போது, குட்டி ராதிகா அகோரி சாமியார் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்,
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...