கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்புகைப்படங்களை வெளியிட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த அக்ஷரா ஹாசன், மும்பை போலீசில் புகார் அளித்தார்.
அக்ஷராவின் புகாரை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல் துறை, அக்ஷரா ஹாசனின் முன்னாள் காதலர் தனுஜ் விர்மானியிடம் சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை ரதி அக்னி ஹோத்ரியின் மகனான தனுஜ் விர்மானி, தன்னிடம் அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இருந்தது உண்மை தான், ஆனால் அந்த புகைப்படங்களை இணையத்தில் தான் வெளியிடவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அக்ஷராவுடன் தான் டேட்டிங் செய்து வந்ததாக கூறிய அவர், கடந்த 2013 ஆம் ஆண்டு அக்ஷரா ஹாசன் தான் தனக்கு அந்த அந்தரங்க புகைப்படங்களை அனுப்பு வைத்தார் என்றும், தற்போது அதை தனது செல்போனில் இருந்து டெலிட் செய்துவிட்டதாகவும், அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, என்று தனுஷ் விர்மானி, தொடர்ந்து மறுத்து வருவதை தொடர்ந்து அக்ஷராவின் மூலம் அந்த புகைப்படங்கள் யார் யாருக்கு அனுப்பப்பட்டது என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...