கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா, கவர்ச்சி மற்றும் நடிப்பு என்று இரண்டையுமே அபரிவிதமாக வெளிப்படுத்திய ‘தரமணி’ படத்தை தொடர்ந்து பல ஆக்ஷன் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் ஆண்ட்ரியா நடிக்க இருக்கும் புதிய ஆக்ஷன் படத்தில் போலீஸ் யூனிபார்ம் போடுகிறார்.
ஆம், முதல் முறையாக ஆண்ட்ரியா காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை பவானி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்க, ராஜேஷ் குமார் தயாரிப்பில், கன்னடத்தில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘தில்’ படத்தை இயக்கிய தில் சத்யா இப்படத்தை இயக்குகிறார். கன்னடத்தில் பல படங்களை இயக்கியிருக்கும் தில் சத்யா, சில படங்களை தயாரித்திருப்பதோடு, 150 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஆக்ஷன், திரில்லர் மற்றும் பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.
சென்னை, கொச்சின், பரோடா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...