ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் அர்ஜுன், ‘ஜெய்ஹிந்த்’, ‘தாயின் மாணிக்கொடி’, ‘முதல்வன்’ உள்ளிட்ட படங்களில் தேசப்பற்றை சொல்லியிருப்பவர், தற்போது இயக்கி தயாரிக்கும் ‘சொல்லிவிடவா’ படத்தின் மூலம் காதலோடு தேசப்பற்றை சொல்லியிருக்கிறார்.
ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் அர்ஜுன் எழுதி இயக்கி தயாரித்துள்ள இப்படத்தில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஹீரோவாக சந்தன் குமார் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் கதைக் களம் மிக சுவாரஸ்யமிக்கதாக அமைக்கப்பட்டதோடு, காதலோடு சேர்த்து தேசப்பற்றையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறார்களாம். மேலும், இதுவரை அர்ஜுன் நடித்திராத ஒரு கதாபாத்திரத்தை இப்படத்தில் ஏற்றிருக்கிறார்.
ஒரு ஆணும், பெண்ணும், தங்களுடைய வேலையில் உள்ள ஆபத்துகளையும், நெருக்கடிகளையும் தாண்டி, எப்படி தங்கள் காதல் வாழ்விலும் பயணிக்கிறார்கள் என்பதை பிரமிக்கும் வகையில் இத்திரைப்படம் வெகு நேர்த்தியாகப் படம்பிடித்து காட்டியிருக்கிறது.
ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், கதையின் தேவைகேற்ப பெரும் நட்சத்திரங்களான சுகாசினி, இயக்குனர் கே.விஸ்வநாத், பிரகாஷ்ராஜ், மற்றும் பலர் தங்களது இயல்பானப் பங்களிப்பின் மூலம் கதைக்கு வலுசேர்க்கிறார்கள்.
பரபரப்பான காட்சிகளுக்கிடையே ’நான் கடவுள்’ ராஜேந்திரன், சதீஷ், மற்றும் யோகிபாபுவின் நகைச்சுவை விருந்து, படத்திற்கு இனிமை சேர்க்கிறது.
ஜெஸ்சி கிப்ட் இசை அமைக்க, இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஹரிணி, சத்யபிரகாஷ் மற்றும் கார்த்திக் பாடல்களை பாடியிருக்கிறார்கள். திரைப்படத்தொகுப்பு கே.கே. மதன் கார்க்கி, விவேகா, பா. விஜய் ஆகியோர் பாடல்களை படைக்க, நடன பயிற்சியை சின்னி பிரகாஷும் கணேஷ் ஆசார்யாவும் கவனித்திருக்கிறார்கள்.
ஹெச் சி வேணுகோபால் ஒளிப்பதிவில் மிளிர்கிறார். சென்னை, தர்மஸ்தலா, ஹைதராபாத், கேரளா மற்றும் வட இந்தியாவில் பல அருமையான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது, காட்சிகளுக்கு மேலும் இனிமை சேர்க்கிறது.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ள இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகிறது. அன்று தான் விஜயின் ‘மெர்சல்’ படமும் வெளியாகிறது. படத்தில் விஜயுடன் இதுவரை மோதவில்லை என்றாலும், படம் ரிலிஸில் அர்ஜுன் விஜயுடன் மோதுகிறார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...