Latest News :

நடிகர் சிவகுமாரை மணந்தார் நடிகை சுஜா வாருணி
Monday November-19 2018

பிக் பாஸ் புகழ் நடிகை சுஜா வாருணி, ஜூனியர் சிவாஜி என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமான சிவாஜி தேவை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியதை தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். 

 

இதற்கிடையே, சிவாஜி தேவ் தனது பெயரை சிவகுமார் என்று மாற்றிக் கொண்டதோடு, ஜூனியர் சிவாஜி என்ற பட்டத்தை துறந்தார். 

 

இந்த நிலையில், சுஜா வாருணி - சிவகுமார் திருமணம் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. 

 

சரியாக காலை 10.17க்கு நடைபெற்ற திருமணத்தில் நடிகைகள் ராதிகா, லிஸி, இயக்குநர் பிரிதர்ஷன், நடிகர்கள் சிவகுமார், எம்.எஸ்.பாஸ்கர், மு.க.தமிழரசு, துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.

 

நடிகர் சிவகுமார் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் - மீனாக்‌ஷி தம்பதியின் மகன் ஆவார்.  மீனாக்‌ஷி நடிகை ஸ்ரீப்ரியாவின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

3771

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery