கஜா புயலின் தாக்கத்தினால் தமிழகத்தின் 18 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதில் சில மாவட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கிறது. குறிப்பாக வேதாரண்யம் உள்ளிட்ட சில பகுதிகளில் உயிர் சேதம் பொறுள் சேதம் அதிகமாக உள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் சரியான கணிப்பால், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் உயிர் சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டாலும், சிலர் புயலின் கோரதாண்டவத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் நிலையில், தமிழ்த் திரைப்பட நடிகர்களும் நிவாரண நிதி வழங்க தொடங்கியுள்ளார்கள்.
நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்களான நடிகர்கள் சூர்யா, கார்த்தி, மருமகள் ஜோதிகா ஆகியோர் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவிக்க, நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
இவர்களைப் போல மேலும் சில நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவார்கள், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...