ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘காற்றின் மொழி’ திரைப்படத்தை தமிழக மக்கள் குடும்பத்தோடு கொண்டாடி வருகிறார்கள். இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் படக்குழுவினர், அதே சமயம், கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா பகுதி மக்களுக்காக வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.
வருத்தம் தெரிவிப்பதோடு நின்றுவிடாமல், தங்களால் முடிந்த நிதி உதவியை டெல்டா பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும், என்ற முடிவு செய்துள்ள ‘காற்றின் மொழி’ திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தான் உதவி செய்வதோடு, பொதுமக்களும் ‘காற்றின் மொழி’ படத்தை பார்ப்பதன் மூலம், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
ஆம், இன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு ‘காற்றின் மொழி’ டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூ.2 தமிழக அரசின் கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.
அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என ஏராளமானோர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களல முடிந்த நிதியை வழங்கி வர, ‘காற்றின் மொழி’ படக்குழுவினர் இத்தகைய முயற்சியின் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பொதுமக்களுக்கும் ஒரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...