‘வாலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ஜோதிகா, சூர்யா நடித்த ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானர். தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.
முன்னணி ஹீரோயினாக இருக்கும் போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகும் ‘மொழி’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாலும், திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கும் ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம், வெற்றியோடு தனது ரீ எண்ட்ரியை தொடங்கியவர், ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ என்று தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதோடு, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், ஜோதிகாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘காற்றின் மொழி’ திரைப்படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ஜோதிகா ஒரு வாய்ப்புக்காக ரொம்பவே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதாவது, நிஜத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா ஜோடி, திருமணத்திற்குப் முன்பு பல படங்களில் காதலர்களாகவும், கணவன் - மனைவியாகவும் நடித்திருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு இவர்கள் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. அப்படி ஒரு வாய்ப்புக்காக தான் ஜோதிகா காத்துக்கொண்டிருக்கிறாராம்.
ஜோதிகா மட்டும் அல்ல, அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் சூர்யாவும் நடிக்க ரெடியாகவே இருக்கிறாராம். ஆனால், இதுவரை எந்த இயக்குநரும் அப்படியொரு வாய்ப்போடு எங்களை அனுகவில்லை, நிஜவாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்தவர்கள், திரையில் காதலித்து நடிப்பதை இயக்குநர்கள் விரும்புவதில்லை என நினைக்கிறேன்., என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜோதிகா கூறியுள்ளார்.
இயக்குநர்களே, இந்த நிஜ காதல் தம்பதி எதிர்ப்பார்க்கும் வாய்ப்பை சீக்கிரம் கொடுங்க...
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...