சமுத்திரக்கனி இயக்கத்தில் சகிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிநயா. வாய் பேச முடியாத, காது கேற்கும் திறன் அற்றவராக இருந்தாலும், அந்த குறைகள் தன்னிடம் இருப்பதை காட்டிக்கொள்ளாமல் திரையில் தோன்றும் அபிநயாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்து வந்த அபிநயா, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கானா தேர்தலில் அபிநயாவும் களம் இறங்கியுள்ளார். வேட்பாளராக அல்ல, தூதராக. ஆம், வர இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் அசெம்பிளி தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போடுவதின் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக, நடிகை அபிநயாவை விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளது.
இதன் மூலம், விரைவில் அபிநயாவை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான குறும்படத்தை தேர்தல் ஆணையம் தயரித்து வெளியிட உள்ளது.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...