தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான ஒயிலாட்டம் கின்னஸ் சாதனையில் நேற்று இடம்பிடித்துள்ளது.
கின்னஸ் சாதனியில் இடம்பெறுவதற்காக நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஒயிலாட்டம் நிகழ்வு, சென்னை அருகே உள்ள திருநின்றவூரில் ஜெயா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கின்னஸ் சாதனை ஒயிலாட்டம் நிகழ்வில் 1415 க்கும் மேற்பட்டவர்கள் ஆடினார்கள். இந்த சாதனை நிகழ்வினை நடத்த பின்னணி பாடகர் வேல்முருகனும், ஸ்வரங்களின் சங்கமம் அமைப்பினரும் ஜெயா கல்லூரி நிர்வாகமும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த சாதனை நிகழ்வில் தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், இசையமைப்பாளர்கள் கங்கைஅமரன், ஜேம்ஸ்வசந்தன், கவிஞர் பிறைசூடன், நடிகர்கள் தம்பிராமையா, வேல்சிவா, பி.ஆர்.ஓ,யூனியன் தலைவர் விஜயமுரளி, கலாவேல்முருகன், சௌமியாராஜேஷ், கின்னஸ் குழு சார்பில் விவேக்
ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...