முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த முன்னணி ஹீரோயின்கள் தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். நயந்தாரா, திரிஷா, அமலா பால் என்று தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளுக்காக காத்திருக்கிறார்கள்.
அதேபோ, பாலிவுட் சினிமாவில் நடிகைகள் ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்க தொடங்கியிருப்பதோடு, ஹாலிவுட் வர பிரலமாகியும் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் பிரியங்கா சோப்ரா. விஜயின் ‘தமிழன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்ததோடு, தற்போது ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
மேலும், தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பாடகர் நிக் என்பவரை காதலித்து வரும் பிரியங்கா, அவரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களது திருமணம் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி, ஜோத்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது.
இந்த அரண்மனையில் 64 ஆடம்பர அறைகள் இருக்கிறதாம். அதில், 22 பேலஸ் அறைகள் மற்றும் 42 சூட்ஸ் அறைகளாம்.
தற்போது, ஜோத்பூர் அரண்மனையின் 40 அறைகளை புக் செய்திருக்கும் பிரியங்கா - நிக் ஜோடி, மொத்த அறைகளுக்கும் ஒரு நாள் இரவுக்கான வாடகையாக ரூ.64.40 லட்சங்கள் கொடுத்துள்ளார்களாம். மேலும், கல்யாண ஜோடிகள் 3 நாளுக்கு ரூ.3.2 கோடியை அறைகளுக்காக மட்டும் செலவு செய்திருக்கிறார்களாம். இதில் ஒருவருக்கான உணவு கட்டணம் ரூ.18 ஆயிரமாம். இத்துடன், லைட்டிங், டெக்கரேஷன் என இன்னும் ஏகப்பட்ட செலவுகள் இருக்கிறதாம்.
இப்படி ஆடம்பரமான திருமணத்தினால், பாலிவுட் சினிமாக்காரர்களை பிரியங்கா சோப்ரா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...