கடந்த வாரம் வெளியான அஜித்தின் ‘விவேகம்’ படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், தற்போது வசூலில் பட்டையை கிளப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.100 கோடி கிளப்பில் விவேகம் படம் இணைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம், தன்னைப் பற்றி எழும் விமர்சனங்கள் எதையும் கண்டுக்கொள்ளாத அஜித், தனது அடுத்தப் படத்தில் தீவிரம் காட்டி வருகிறாராம்.
‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று தொடர்ந்து சிவாவுடன் மூன்று படங்கள் இணைந்து அஜித் பணிபுரிந்துள்ள நிலையில், இனியும் அவர் சிவா இயக்கத்தில் நடிக்க கூடாது, வேறு இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும், என்பது தான் அஜித் ரசிகர்களின் ஆசை. ஆனால், ரசிகர்களே வேண்டாம் என்று அறிவித்த அஜித்தா ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற போகிறார். ஆம், நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் தான் அஜித் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
‘விவேகம்’ படத்தின் போதே சிவா அஜித்திடம் சில கதைகளை சொல்லியிருக்கிறார். இதில் சரித்திரம் தொடர்புடைய கதை ஒன்று அஜித்துக்கு பிடித்துவிட்டதாம். அந்த கதையை டெவலப் செய்ய சொல்லிய அஜித், அப்படத்தில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை ’மெர்சல்’ படத்தை தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ‘சங்கமித்ரா’ என்ற சரித்திரப் படத்தை மிகப்பெரிய் பட்ஜெட்டில் தயாரித்து வரும் தேனாண்டாள் நிறுவனம் தற்போது அஜித் படத்தையும் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க முன் வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...